சினிமா

இயக்குனர் அட்லீ பெறும் சம்பளம் இத்தனை கோடியா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

Summary:

Director atlee

தமிழ் சினிமாவில் ராணி ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. இவர் அதற்கு முன்பு துணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு வெற்றியையும், புகழையும் தேடி தந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மாஸ் நடிகரான விஜயை வைத்து தெறி, மெர்சல் என்ற இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதிக்கு திரைக்கு வரவுள்ளது. மேலும் பிகில் படத்திற்காக இயக்குனர் அட்லீ 25 கோடி சம்பளமாக ஏ. ஜி. எஸ் நிறுவனம் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி அட்லீ அடுத்ததாக நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திற்கு 40 கோடி சம்பளம் பெறுகிறாராம். 


Advertisement