சினிமா

திருமணம் நடந்து ஓராண்டுக்குள் விவாகரத்து..! பின்னர் விபச்சார வழக்கில் கைது.! தற்போது மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை.!

Summary:

Did Shweta Basu Prasad seek therapy for mental health during lockdown

தனக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு வீடியோ கால் மூலம் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெலுங்கு முன்னணி நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்வேதா பாசு தமிழில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக சந்தமாமா என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் பட வாய்ப்புகள் குறைந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறி இவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அந்த குற்றச்சாட்டு பொய் குற்றசாட்டு என கூறி பின்னர் இவரை விடுதலை செய்தனர்.

அதன் பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தன. அத்தனேரம் இவர் தெலுங்கில் பிரபல இயக்குனர் ஒருவரையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை ஒரே ஆண்டில் விவாகரத்தும் செய்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், தான் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும், அதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் ஸ்வேதா பாசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நான் இதற்கு முன்னர் இத்தகைய சூழலில் இருந்தது இல்லை என்றும், தற்போது இதற்காக வீடியோ கால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவருவதாகவும் ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.


Advertisement