சினிமா

இந்த பிரபல நடிகர், நடிகைகளுக்கு வாழ்வளித்தவர் நடிகர் தனுஷ்! விவேக் சொன்ன அந்த லிஸ்ட்ல யாரெல்லாம் இருகாங்க தெரியுமா?

Summary:

Dhush gave life to following top stars said by vivek

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி  இவர் ஒரு இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர். இப்படி பல்வேறு திறமைகளை தன்னுள் வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இந்நிலையில் 36 வயதாகும் நடிகர் தனது நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

நடிகர் தனுஷுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில், தனுஷுக்கு தனது வாழ்த்தை டிவிட்டர் மூலம் தெரிவித்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கூறுகையில், இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர், நடிகைகளாக இருக்கும் பலருக்கு வாழ்வு கொடுத்தவர் நடிகர் தனுஷ்தான் என குறிப்பிட்டிருந்தார்.

இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரோபோசங்கர் ஆகியோர் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். மேலும், நயன்தாரா, த்ரிஷா, அனிருத் போன்றறது பெயர்களை குறிப்பிட்டிருந்த அவர் கடைசியாக தனக்கும் வாழ்வு கொடுத்தது தனுஷ்தான் என அவரது பெயரையும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விவேக். 


Advertisement