சினிமா

குழந்தை கொடுக்கும் தாராள பிரபுவாக ஹரிஷ் கல்யாண்! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்!

Summary:

Dharalaprabhu first look photo viral

பாலிவுட் சினிமாவில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்து மாபெரும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்கி டோனர். ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த இப்படம் விந்துதானம் மற்றும் குழந்தையின்மையை ஆகியவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் 3 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்குக்கு கடுமையாக போட்டி நிலவியநிலையில், இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் தாராள பிரபு என பெயரிடப்பட்ட இப்படத்தில்  ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 


இப்படத்தை இயக்குனர்கள் கிரிஷ், விஜய் போன்றோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் அனிருத் வெளியிட்டுள்ளார். இதில் தாமரை மலரில் 5 குழந்தைகளை தானம் கொடுப்பது போன்று  ஹரிஷ் காட்சியளித்துள்ளார்.


Advertisement