அரசியல் தமிழகம்

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக பாட்டு பாடும் தனுஷ்.?

Summary:

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரஹ்மான் இசையில் தனுஷ் பாடவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷுடன் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்தது. 

இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், ‘நமது இசைப்புயலுடன் அரட்டை அடிப்பதும் பாடுவதும் மகிழ்ச்சி’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் படக்குழு தரப்பில் இதை இன்னும் உறுதி செய்யவில்லை.


Advertisement