சினிமா

தனுஷ் கொடுத்த முத்தம்! வைரலாகும் வட சென்னை டீஸர் !!

Summary:

Dhanush-Aishwarya Rajesh liplock

தேசிய விருது பெற்ற ஆடுகளம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் வடசென்னை. இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், 2 பாகங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த டீசரில், ஐஸ்வர்யா ராஜேஷ் உதட்டை தனுஷ் கவ்விப்பிடித்து முத்தம் கொடுக்கும் நெருக்கமான காட்சி வெளியாகியுள்ளது. 

danush kiss iswarya in vada chennai க்கான பட முடிவு

இதுபோன்ற காட்சிகளில் தனுஷ்அதிகம் நடிப்பதில்லை. நடிக்க வந்த புதிதில் இப்படி நடித்தாலும், பின்னர் நேரடியான முத்த காட்சிகளில் அதிகம்பங்கேற்காமலேயே அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னை படத்தின் முக்கியத்துவம் கருதி, அவர் ஐஸ்வர்யா உதட்டை கவ்விப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 

danush kiss iswarya in vada chennai க்கான பட முடிவு

இப்படி ஒரு காட்சி வைத்தால், பொதுவாக, சென்சார் போர்டில் ஏ சான்றிதழ் தரப்படும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காட்சியைநீக்க சொல்வார்கள். ஆனால், வடசென்னை படத்திற்கு, யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இது இயக்குனர் வெற்றிமாறனின் கதைக்கு கிடைத்த வெற்றி என்றும், காதலின் மகத்துவம் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement