Health Tips: குட்டித்தூக்கம் போட ஆசையா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
பரபரப்பான வேலை சூழலில் நாம் களைப்பாற முயற்சிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாளும் பலருக்கும் பரபரப்பான வேலைகள் இருந்துகொண்டு இருக்கும். இந்த சமயத்தில், சில நிமிடங்கள் இடைவெளி கிடைக்கும்போது குட்டித்தூக்கம் போட மனம் அலைமோதும். இது உடலுக்கு மட்டுமல்லாது மனநலனுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறான நேரத்தில் ஒருசில விஷயங்களை நாம் செய்யக்கூடாது.
குட்டி தூக்கத்தின் வகைகள்:
ஒருசிலர் தூக்கம் வராத நேரத்திலும், இந்த சமயத்தில் நாம் தூங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓய்வெடுப்பார்கள். பிறர் அவசர கதியில் உறங்குவார்கள். அதிக உடல் சோர்வு, தலைசுற்றல், கண்களில் உறக்கம் வந்து உறங்குவது இந்த வகை ஆகும். இந்த இரண்டு தரப்பையும் விட வித்தியாசமாக, ஒவ்வொரு நாளும் இது உறக்கத்துக்கானது என திட்டமிட்டு உறங்குவார்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், இல்லத்தரசர்கள், குழந்தைகள், முதியவர்கள் இவ்வகை பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளே.. டீயை இப்படி குடிப்பீங்களா? இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தவறை திருத்திக்கோங்க.!

எப்போது தூங்கலாம்?
இந்த வகையில் எப்படியான தூக்கம் எடுத்தாலும் நமக்கு நன்மை கிடைக்கும். உடல் இலகுவதால், கவனம் அதிகரித்தல், மனநிலை மாற்றம், வேலையில் கூடுதல் ஆர்வம், நினைவாற்றல் மேம்பாடு, இதய பிரச்சனை அபாயம் குறைதல் என பல நன்மைகள் ஏற்படும். இவ்வாறான நன்மைகள் கிடைத்தாலும், நண்பகல் தொடங்கிய 1 - 2 மணியளவில் தூங்குவது நல்லது.சுமார் 20 முதல் 30 நிமிடம் வரை மட்டுமே உறங்கலாம். அதிக நேரம் தூங்கினால் உடல் சோர்வு உண்டாகும். தொந்தரவு இல்லாத இடத்தில் உறங்குவது நல்லது.
நீங்கள் ஒரு இடத்தில் அசௌகரியமாக இருப்பதாக நினைத்தால், அங்கு உறங்க வேண்டாம். அதிக சத்தம் கொண்ட இடம், வெளிச்சம் கொண்ட இடத்தில் உறங்காமல் இருப்பது நல்லது. பிற்பகலில் 3 மணிக்கு மேல் உறங்காமல் இருக்கலாம் அல்லது அதற்கு முன்கூட்டியே உறங்குவது நல்லது.