அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பிரபல துணை நடிகர் பரபரப்பு கைது., அதிர்ச்சியில் திரையுலகம்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வடிவேலுவின் நடிப்பில் வெளியான திரைப்படம் எலி. இப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் எலி ராஜு. இவர் சென்னையில் உள்ள சாலைக்கிராம அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவரின் வீட்டருகே 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று சிறுமி விளையாண்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது, துணை நடிகர் எலி ராஜு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து, தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துணை நடிகர் எலி ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் திரைஉலகினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.