சினிமா

இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எவை எவை? முழு பட்டியல் இதோ!

Summary:

Deepavali 2019 releasing movies list

தீபாவளி என்றாலே புது உடை, இனிப்பு, பட்டாசு, வீட்டில் மகிழ்ச்சி என மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இந்த மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் பண்டிகை நாளான அன்று புதிதாக வெளிவரும் திரைபட்டங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பது மற்றொரு மகிழ்ச்சி.

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் மட்டுமே வெளிவரும் திரைப்படங்கள் இப்போதெல்லாம் வியாழன், வெள்ளி ஆனாலே வெளிவந்து திரையரங்கங்கள் நிரம்பி வழிகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றுவரை ஏதாவது பண்டிகை நாட்களில் மட்டுமே வெளிவருகிறது.

அந்த வகையில் இந்த தீபாவளியை மேலும் குஷிப்படுத்த எந்த எந்த படங்கள் திரைக்கு வர இருக்கிறது என்று பார்ப்போம். தளபதி விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும், கார்த்தி நடிப்பில் ஆக்சன் மற்றும் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் கைதி திரைப்படம் அதே அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சங்கத்தமிழன் திரைப்படமும் வரும் அக்டோபர் 25 அன்று வெளியாக உள்ளது. தற்போது வரை இந்த மூன்று திரைப்படங்கள் மட்டுமே இந்த வருட தீபாவளி ரேஸில் இடம் பிடித்துள்ளது.


Advertisement