சினிமா

நேர்கொண்ட பார்வை அஜித்தை பற்றி, இந்த பிரபல தொகுப்பாளினி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

Summary:

dd talk about nerkonda parvai movie

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

nerkonda parvai க்கான பட முடிவு

இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட்8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்தகைய படங்களில் நடித்த மாஸ் ஹீரோ அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. மேலும் பல பிரபலங்களும் இப்படத்திற்கு வாழ்த்துக் கூறிவருகின்றனர்.

divyadharsini க்கான பட முடிவு

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்திற்கு வாழ்த்துக் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் மிகவும் தைரியமான நபர் திரு.அஜித் குமார் இப்படத்தின் மூலம் இல்லை என்றால் இல்லையே என்பதை அனைவருக்கும் கூறியுள்ளார். இதனால் அவர் மீது உள்ள மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது நன்றி என்று என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.