இனி அவரை மட்டும் பேட்டியே எடுக்கமாட்டேன்! வெளிப்படையாக போட்டுடைத்த டிடி!! அதுவும் யாரை தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இனி அவரை மட்டும் பேட்டியே எடுக்கமாட்டேன்! வெளிப்படையாக போட்டுடைத்த டிடி!! அதுவும் யாரை தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

மேலும் விஜய் டிவியில் காபி வித் டிடி,ஜோடி, மற்றும் விருது விழாக்கள் போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் அவர் சமீபத்தில் வெளிவந்த பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

divyadharsini க்கான பட முடிவு

இந்நிலையில் தனது திரைப்பயணம் குறித்து டிடி பேட்டி அளித்திருந்தார்.அதில் நீங்கள் யாரை இனி பேட்டியே எடுக்க கூடாது என்று நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் இனி என் வாழ்நாளில்  இயக்குனர் மிஷ்கின் அவர்களை பேட்டி எடுக்க கூடாது என்று நினைக்கிறேன்.

அவரை ஒருமுறை பேட்டி எடுக்க  ரொம்ப கஷ்டப்பட்டேன். அவர் சாதாரணமாக நன்றாக பேசுகிறார், ஆனால் கேள்வி கேட்கும்போது மிகவும் சீரியஸாக டெரராக பார்ப்பார், எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது. அதனால் அவரை பேட்டி எடுக்கக்கூடாது என்ற லிஸ்டில் வைத்துள்ளேன் என கூறியுள்ளார் .


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo