என்னால அழுகை அடக்க முடியலடா.. தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ! ஏன்?என்னாச்சு பார்த்தீங்களா!!



Dd shares 169 movie video happily

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்த் இறுதியாக சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது 169 வது படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் அதனை அறிவிக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி செம ஸ்டைலாக மாஸாக இருப்பார். 

இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் உற்சாகத்துடன் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோவை பகிர்ந்த தொகுப்பாளினி டிடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் "என்னால அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா" என்று குறிப்பிட்டு நெல்சனை டேக் செய்துள்ளார். பின் "தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு டா.." என்று குறிப்பிட்டு "தேங்க் யூ சார்" என்று சொல்லி ரஜினியையும் டேக் செய்துள்ளார். மேலும் "போங்கப்பா ரொம்ப ஹேப்பி" என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.