சினிமா

பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டாரின் தர்பார் HD புகைப்படங்கள்! ரசிகர்களுக்கு முருகதாஸ் வைத்த போட்டி.

Summary:

Darbar hd photos

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். 

மும்மையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தின.

இந்நிலையில் இன்று ஜூலை 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தர்பார் படத்தினை குறித்த புதிய அப்டேட் வெளியாகும் என இய்ககுநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதன்படி படத்தின் HD புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முருகதாஸ். 

மேலும் அந்த புகைப்ழடங்களை வைத்து சிறந்த போஸ்டர்களை ரசிகர்கள் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். சிறந்த போஸ்டர் அபீசியல் போஸ்டராக வெளியிடப்படும் என்றும் தெரிவிதாதுள்ளார். Advertisement