சினிமா

பேட்ட பராக்! ரஜினியின் என்ட்ரிக்கு ரசிகர்களோடு சேர்ந்து நடனமாடிய திரை பிரபலம்

Summary:

danush in rohini for first show

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’ திரைப்படம் இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ரஜினியின் இளமைத் தோற்றத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்திற்கான புரோமசன் வேலைகள் மிகவும் பிராமண்டமாக நடைபெற்றன. 

படத்தின் முதல் பாதியை பார்த்துள்ள ரசிகர்கள் படையப்பாவிற்கு அடுத்து ரஜினியின் மிகவும் தரமான திரைப்படம் இது என பதிவிட்டுள்ளனர். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கார்த்திக் சுப்புராஜ் மிகவும் தரமாக உருவாக்கி உள்ளார் எனவும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் பேட்ட படத்தினை அதிகாலையே ரசிகர்களுடன் சேர்ந்து காண்பதற்காக ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் மற்றும் படத்தின் கதாநாயகி த்ரிஷா ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டருக்கு வருகை புரிந்துள்ளனர். அங்கு ரசிகர்களோடு ரசிகர்களாக சேர்ந்து பேட்ட படத்தினை பார்த்து வருகிறார்கள். மேலும் ரஜினியின் முதல் காட்சிக்கு தமிழ் எழுத்து நடனமாடியதாகவும் தெரிகிறது.


Advertisement