சினிமா

வடசென்னை: "என்னுடைய மூன்று வருட கனவு இன்று நினைவாகி இருக்கிறது" நெகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!

Summary:

danush 3 year dream of vada chennai

ஆடுகளம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் வடசென்னை Part1. கடந்த மூன்று வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இன்று வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வட சென்னை திரைப்படத்தில் தனுஷ் தேசியளவில் கேரம் போர்டு சாம்பியனாக நடித்துள்ளார். 

வட சென்னை படம் 3 பாகங்களாக உருவாகவுள்ளது. விளையாட்டு மட்டுமல்லாமல் கேங்கஸ்டர் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள முதல் பாகத்தில் தனுஷின் அன்பு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 1980 முதல் 2000ம் ஆண்டு வரை அன்புவின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ராதா ரவி, கருணாஸ், கிஷோர், டேனியல் அன்னி போப் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். அவர்களுக்கான கதாப்பாத்திரம் கச்சிதமாக பொறுந்தியுள்ளது. 

இந்நிலையில் இத்திரைப்படம் இன்று வெளியான மகிழ்ச்சியில் உள்ள நடிகர் தனுஷ் "என்னுடைய மூன்று வருட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement