பிக்பாஸ் சாண்டிக்கு இப்படியொரு வெறித்தனமான என்ட்ரியா.! மரண மாஸ் வீடியோ இதோ!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா வீடியோ

பிக்பாஸ் சாண்டிக்கு இப்படியொரு வெறித்தனமான என்ட்ரியா.! மரண மாஸ் வீடியோ இதோ!!

jபிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்திற்கு தேர்வானர்.

பின்னர் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி 50 லட்சம் பரிசு தொகையை வென்றார். மேலும் சாண்டி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினார். 

 நடன இயக்குனர் சாண்டி எப்பொழுதும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலகலப்பாக இருக்க கூடியவர். மேலும் எத்தகைய பிரச்சனை வந்தாலும் அதனை ஈஸியாக எடுத்துக் கொண்டு காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடியவர். மேலும் அவர் இருக்கும் இடமே எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். 

 இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாண்டி தனது வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாண்டி தனது மகள் மற்றும் நடன குழுவுடன் சேர்ந்து பிகில் படத்தில் வெறித்தனம் பாடலுக்கு மரணமாஸ் ஆட்டம் போட்டுள்ளனர். மேலும் தனக்கு உறுதுணையாக இருந்த தனது ரசிகர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo