சினிமா விளையாட்டு

சூர்யாவிடம் திடீரென லைவ் சாட்டில் கேள்வி கேட்ட சுரேஷ் ரெய்னா! என்ன கேள்வி தெரியுமா?

Summary:

Cricket player raina asked question to surya in live chat

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள NGK திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனிற்காக படத்தின் நாயகன் சூர்யா தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா,சூர்யவின் லைவ் சாட்டிற்கு வந்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் மற்றும் ஏன் என நடிகர் சூர்யாவிடம் கேள்வி கேட்டிருந்தார் கிரிக்கெட் வீரர் ரெய்னா.

ரெய்னாவின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சூர்யா, கண்டிப்பாக அது நீங்களும், தோணியும்தான் என பதிலளித்தார். மேலும், உங்களது பாடும் திறமையாகவும், தோனியின் படம் வரையும் திறமைக்காகவும் உங்கள் இருவரையும் எனக்கு பிடிக்கும் என நடிகர் சூர்யா பதிலளித்தார். 


Advertisement