சினிமா

கடைசிவரை எனது அந்த ஆசை நிறைவேறாத கனவாகவே இருக்கும்! எஸ்.பி.பி மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் உருக்கம்!

Summary:

Cricket Player dinesh karthick tweet about spb dead

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்
அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகி எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் போன்ற செயற்கை உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இவரது மரணம் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மிகவும் வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எனக்கு மிகவும் விருப்பமான கலைஞர் இன்று காலமானார். எஸ்பிபி சார் சிறந்த கலைஞர். இந்திய சினிமா உலகில் நீங்கள் பன்முக திறமை கொண்ட பாடகர். இந்த உலகம் உங்களை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

நீங்கள் நான் உங்கள் வீட்டிற்கு வந்தபோது எனக்காக எனக்கு பிடித்த பாடலை என்னிடம் தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன். அதே போல் இன்னொரு முறை உங்களிடம் பாடச் சொல்லி கேட்க வேண்டுமென ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசை எனக்கு கடைசிவரை நிறைவேறாத கனவாகவே இருக்கப்போகிறது. நீங்கள் இப்போது எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டீர்கள். உங்களோட ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 


Advertisement