சினிமா

குக் வித் கோமாளி புகழ் படைத்த புதிய சாதனை! கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்!! வைரலாகும் வீடியோ!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் வனிதா வெற்றி பெற்றார். முதல் சீசனில் கோமாளியான புகழ், ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து செய்த அலப்பறைகள் வேற லெவல். அனைவரையும் ரசிக்க வைத்தது.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளிகளான புகழ், ஷிவாங்கி,மணிமேகலை, சுனிதா, சரத் செய்யும் நகைச்சுவைகளை ரசிப்பதற்கு என பெரும் ரசிகர்கூட்டமே உள்ளது. அவர்கள் செய்யும் சேட்டைகளை கண்டு ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கின்றனர். விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் விட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் தற்போது பெருமளவில் பிரபலமாகி விட்டனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அஸ்வின் தற்போது இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். ஷிவாங்கியை 1.8 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். அத்தகைய சந்தோசத்தை அவர் தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.  மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழுக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement