சினிமா

குக் வித் கோமாளியில் ஷிவாங்கி, புகழ் கொடுத்த சர்ப்ரைஸ்!! செம ஷாக்கான போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வை

விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இதன் முதல் சீசனில் பல பிரபலங்கள் குக்காக கலந்துகொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி 2 வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீசனில் தற்போது நடிகை ஷகிலா, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், கனி மற்றும் வைல்ட் கார்டு என்ட்ரியில் நடிகை ரித்திகா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் ஆகியோர் கோமாளியாக ரகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் வருவர். இந்த நிலையில் இந்த வாரம் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் போல கோமாளிகள் மாறியுள்ளனர். அதன்படி ஷிவாங்கி நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தா போல ஸ்கூல் யூனிபார்மில் வருகிறார். மேலும் புகழ் மாரி தனுஷ் போன்ற கெட்டப்பில் வருகிறார். அவர்களைக் கண்ட குக்குகள் செம ஷாக்காகியுள்ளனர்.  இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் மற்ற கோமாளிகளின் கெட்டப்பை காண எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 


Advertisement