பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்!! தீயாய் பரவும் புகைப்படம்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் குக் வித் கோமாளி பிரபலம்!! தீயாய் பரவும் புகைப்படம்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!


cook with comali pavithra going to act as pair to kavin

பிக்பாஸ் பிரபலமான கவின் குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா லக்ஷ்மியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். அதனை தொடர்ந்து அவர் மாபெரும் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் நட்புனா என்னா தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர்  சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் என பல சர்ச்சைகளை சந்தித்தார். இந்த நிலையில் அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 

kavin

இந்த நிலையில் கவின் நடிக்கும் படமொன்றில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை பவித்ரா லட்சுமி ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இருவரும் பட சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.