பெரிய படிப்பாளினிதானோ.. குக் வித் கோமாளி பாலா 10ஆம் வகுப்பில் பெற்ற மார்க்கை பார்த்தீர்களா! செம ஷாக்கான ரசிகர்கள்!!

பெரிய படிப்பாளினிதானோ.. குக் வித் கோமாளி பாலா 10ஆம் வகுப்பில் பெற்ற மார்க்கை பார்த்தீர்களா! செம ஷாக்கான ரசிகர்கள்!!


cook-with-comali-bala-10th-mark-viral

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது ஒல்லியான உடம்பால், காமெடியான பஞ்ச்களால் அனைவரையும் கலாய்த்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து தற்போது பிரபலமான கலைஞராக இருப்பவர் பாலா.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று டைமிங்கில் ரைமிங்கான கவுண்டர்கள் கொடுத்து, சக கோமாளிகள் மற்றும் போட்டியாளர்களுடன் செம ரகளைகள் செய்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் அவர் பங்கு பெறாமல் எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களும் கிடையாது என்பது போல அவர் பிரபலமாகிவிட்டார்.

bala

மேலும் பாலா சினிமாவிலும் களமிறங்கி ஜூங்கா, தும்பா, காக்டெய்ல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலைக்கு தான் வர மிகவும் கஷ்டப்பட்டதாக அவ்வபோது பேட்டிகளில் கூறிவரும் பாலா பெரும் படிப்பாளியாம். இதுகுறித்து அண்மையில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்த அவரது பெற்றோர்களே கூறியிருந்தனர்.

அந்த நிலையில் தற்போது பாலா பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பத்தாம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே இரண்டாமிடம் பெற்றுள்ளார். அதனை சிறப்பிக்கும் வகையில் பள்ளி நிர்வாகமே புகைப்படம் போட்டு பேனரும் வைத்துள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகிறது