மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் விஷால்..



Controversy news about vishal

ஹங்கிரி ஓல்ஃப் என்டேர்டைன்மெண்ட் அண்ட் ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் கார்த்திக் வெங்கடராமன் தயாரித்துள்ள படம் "எனக்கு எண்டே கிடையாது". அறிமுக இயக்குனர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

vishal

ஹீரோயினாக ஸ்வயம்ஸித்தா நடித்துள்ள இப்படத்தில், இயக்குனர் விக்ரம் ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் இருவருமே கதாநாயகர்களாக நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் இப்படம் ஒரு டார்க் காமெடி கலந்த கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய கார்த்திக் வெங்கட்ராமன், " நான் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அனால் ஒரு ஆர்வத்தில் நடிப்பு பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருடங்களாக இப்படத்தை தயாரிக்க முயற்சித்துள்ளேன்.

vishal

எனக்கு ஏற்பட்ட தடையெல்லாம் தாண்டி தான் இதை முடித்துள்ளேன். சமீபத்தில் நடிகர் விஷால் "1 கோடி  முதல் 4 கோடி வரை சிறிய முதலீட்டில் யாரும் படம் எடுக்க வர வேண்டாம் என்று கூறியிருந்தார். அப்படி சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று காட்டமாக கூறியிருந்தார்.