நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!! நடந்தது என்ன??

நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!! நடந்தது என்ன??


complaint-on-actress-bhanupriya

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்  நடிகை பானுப்பிரியா. இவர் சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜ் மனைவியாக நடித்திருந்தார். அவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

தற்போது பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகார் வந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவர், சமல்கோட்டா பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

bhanu priya

அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை என்றும், பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அந்த சிறுமியின் தாயார் புகாரில் கூறியிருந்தார்.

சிறுமி வீட்டில் பணிபுரியும் போது நகை, பணம், போன்றவற்றை எடுத்து சென்றுவிட்டதாகவும் இதைக் கண்டுபிடித்து பொருட்களை திரும்ப ஒப்படைக்க சிறுமியின் தாயாரிடம் கூறியதாகவும் பானுபிரியா தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சினிமாத்துறையில் நல்ல பெயரை வைத்திருக்கும் நடிகை பானுபிரியாவின் மீது ஏற்பட்டது வீண்பழி என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.