சினிமா

நகைச்சுவை நடிகர் செந்திலின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ!

Summary:

Comedy actor senthil current status

தமிழ் சினிமாவில் இன்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால், 80 , 90 களில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை நடிகர்கள் என்றாலே அது நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் தான். இவர்களை திரையில் பார்த்தாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்று வரை மிகவும் பிரபலம். அதில் குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து கலக்கிய வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பன சுந்தரி காமெடி இரண்டும் இன்றுவரை பிரபலம் எனலாம்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர்கள் தற்போது என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில் நடிகர் செந்தில் தானா சேர்ந்த கூட்டம், சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார்.


Advertisement