புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கவுண்டமணியிடம் சவால் விட்ட செந்தில், சாதித்து காட்டிய கவுண்டமணி.. என்ன நடந்தது.!?
தமிழ் திரையுலகின் காமெடி ஜாம்பவான்கள்
தமிழ் திரையுலகில் 80 முதல் 90களின் காலகட்டத்தில் காமெடி ஜாம்பவான்களாக இருந்து வந்தவர்கள் கவுண்டமணி, செந்தில். அன்றைய காலகட்டத்தில் வந்த திரைப்படங்களில் நடிகர், நடிகைகளை விட கவுண்டமணி, செந்தில் இவர்களின் நகைச்சுவை இடம்பெற்று இருந்தாலே படம் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. அந்த அளவிற்கு தங்களின் நகைச்சுவை திறன் மூலம் தமிழ் சினிமாவை தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.
மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த படத்தில் நடித்தாலும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல ஒன்றாகவே நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், குறிப்பாக கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், ஜென்டில்மேன் போன்ற படங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்து மக்கள் மனதில் இன்று வரை இவர்களின் நடிப்பு திறமையை நிலைநாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: அஜித் ரசிகர்களை 'பக்தர்கள்' என அழைத்து படக்குழு வெளியிட்ட விடாமுயற்சி அப்டேட்.!
கவுண்டமணியிடம் சவால் வட்ட செந்தில்
இது போன்ற நிலையில், காமெடி நடிகர் செந்தில் ஒரு நாள் கவுண்டமணி அவர்களிடம் சென்று நான் இல்லாமல் உங்களால் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாது என்று சவாலாக கூறியுள்ளார். இதைக் கேட்ட கவுண்டமணி சவாலாக எடுத்துகொண்டு தொடர்ந்து தனியாக பல படங்களில் நடித்து வெற்றி அடைந்தார். நடிகர் செந்திலும் தனியாக படத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.
இத்தகைய நிலையில் கவுண்டமணி, செந்தில் இருவருக்கும் இடையில் ஏதோ சண்டை இருக்கிறது என்று திரைத்துறை வட்டாரத்தில் கிசுகிசுத்து வந்தனர். மேலும் கவுண்டமணி தனியாக பல படங்களில் நடித்து வெற்றி பெற்றதால் செந்தில் தான் கூறியது தவறு என்பதை உணர்ந்துள்ளார் என்றும் கூறி வந்தனர்.
இதையும் படிங்க: கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!