புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அஜித் ரசிகர்களை 'பக்தர்கள்' என அழைத்து படக்குழு வெளியிட்ட விடாமுயற்சி அப்டேட்.!
முன்னணி நடிகர்கள் பங்கேற்பு :
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் குமார் நடிக்கின்ற திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் நியமிக்கப்பட்டுள்ளார். இதில், நடிகை ரெஜினா, திரிஷா, ஆரவ், அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டது.
டப்பிங் பணிகள் :
இதன் காரணமாக அஜித் தனது குட் பேட் அக்லீ என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். பின்னர் மீண்டும் கடந்த மாதம் விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!
தள்ளிப்போன அப்டேட் :
இந்த நிலையில் திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக போவதாக படக்குழு தெரிவித்த நிலையில், ஆனால் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் டீசர் வெளியாகவில்லை. எனவே, ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு பட குழுவினரை சமூக வலை தளங்களில் டேக் செய்து போஸ்டர்கள் மற்றும் கமெண்ட்கள் போட்டு வந்தனர்.
டெம்ப்ளேட் வாசகம் :
இத்தகைய நிலையில், சமீப காலமாக ரசிகர்களின் கடவுளே அஜித்தே என்ற கோஷம் மிகவும் வைரலானது. எனவே அஜித்தை கடவுள் போல அவர்கள் நினைப்பது போலவும், மீம்ஸ்கள் உலாவி வந்தன. இந்த நிலையில், அப்டேட் கேட்டு தொல்லை கொடுக்கும் ரசிகர்களிடம், "பக்தர்கள் அமைதி காக்கவும்" என்ற கோவில் வாசகம் ஒன்றை படக்குழு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படிங்க: 96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!