சினிமா

இந்த காமெடி நடிகரின் மனைவி, குழந்தைகளா இது? வெளியான புகைப்படம்!

Summary:

Comedy actor king kong family photo

சூப்பர் ஸ்டார் நடித்த அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காமெடி நடிகர் கிங் காங். நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் நடித்த படங்களில் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிங் காங். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ள கிங் காங்க் இதுவரை முந்நூறுக்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

பல்வேறு சினிமா சார்ந்த விருதுகளைம் வாங்கியுள்ளார் கிங் காங். மேலும் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வேலூரில் உள்ள ஒரு பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் படத்தையும் அளித்துள்ளது.

சிலகாலங்களாக வாய்ப்பு இல்லாமல் இருந்த கிங் காங் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார். சினிமாவில் புகழ்பெற்ற இவருக்கும் கலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இதுவரை அதிகம் வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement