நடிகையுடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு.. படப்பிடிப்பின் போது அட்டகாசம் செய்த வைகைபுயல்.?Comedy acer vadivelu dance with vikram movie actress

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக கலக்கி வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வடிவேலு.

Vadivelu

இதன்பின் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சில வருடங்களாக வடிவேலு சினிமா துறையில் நடித்தாலும் இவர் நடித்த காமெடி கதாபாத்திரங்கள் இணையத்தில் மீம்ஸ்களாக வலம் வந்தன.

மேலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த வடிவேலு கதாநாயகனாக சில திரைப்படங்களில் நடித்திருந்தார். படங்கள் பெரும் தோல்வி அடைந்தன. இதனைதொடர்ந்து உதயநிதி ஸ்டாலினி நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vadivelu
இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 'விக்ரம்' திரைப்படத்தில் ஏஜென்ட் டினா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வைகைபுயல் வடிவேலு படப்பிடிப்பின் போது குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.