அட.. சிட்டிசன் பட ஹீரோயினா இது! ஆள் அடையாளமே தெரியாம எப்படி ஆகிட்டாரு பார்த்தீர்களா! செம ஷாக்கான ரசிகர்கள்!!

அட.. சிட்டிசன் பட ஹீரோயினா இது! ஆள் அடையாளமே தெரியாம எப்படி ஆகிட்டாரு பார்த்தீர்களா! செம ஷாக்கான ரசிகர்கள்!!


citizen movie actress vasundra dass family photo viral

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் ஹீரோயினாக நடித்த வசுந்தரா தாஸ் உடல் எடை அதிகரித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ஏராளமானோர் தற்போதைய நிலை என்ன? எங்கு உள்ளனர்? என்பதே தெரியாமல் உள்ளனர். இவ்வாறு தமிழ் சினிமாவில் ஹேராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வசுந்தரா தாஸ். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான சிட்டிசன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் ஹிந்தி, மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் மான்சூன் வெட்டிங் என்ற ஆங்கில திரைப்படத்தில் கூட  அவர் நடித்துள்ளார். ஆனால் வசுந்தரா தாஸ் அடிப்படையில் ஒரு பாடகி ஆவார். இந்த நிலையில் அவர் டிரம்ஸ் கலைஞரான ரோபர்ட் நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு செட்டிலானார்.

vasunthara dass

இந்த நிலையில் வசுந்தரா தாஸ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் சிட்டிசன் பட ஹீரோயினா இது என்ன ஆச்சரியம் அடைந்துள்ளனர்.