"சினிமாவில் நடிக்கலாம் வாங்க".. கல்லூரி மாணவியை சீரழித்த தயாரிப்பாளர் பார்த்திபன்.. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்..!!

"சினிமாவில் நடிக்கலாம் வாங்க".. கல்லூரி மாணவியை சீரழித்த தயாரிப்பாளர் பார்த்திபன்.. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்..!!


cinema-producer-sexual-abused-college-girl-arrested-now

 

சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என ஆசைகாண்பித்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் 50 நாட்களுக்கு பின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்தீபன் (வயது 35). கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் இருந்துகொண்டு, TN 41 என்ற தலைப்பில் திரைப்படம் எடுப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளார். மேலும், இந்த படத்தில் நடிக்க கதாநாயகி, துணை நடிகர்கள் தேவை என்றும் இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார். 

இந்த விளம்பரத்தை கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பயிலும் மாணவி பார்த்துள்ளார். மேலும், அவர் தனக்கு அன்று 18 வயதாக இருக்கும்போது பார்த்தீபனை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மாணவியை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்த பார்த்தீபன், அவரிடம் கதை தொடர்பாக பேச வேண்டும் என விடுதிக்கு அழைத்து, அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். 

பின்னர் தன்னிலை உணர்ந்த மாணவி பார்த்தீபனிடம் சண்டையிட்டபோது, திரையில் பெரிய நடிகை ஆக்குகிறேன் என்று கூறி சமாளித்து இருக்கிறான். அவ்வப்போது அவரை நேரில் வரவழைத்து மீண்டும் அத்துமீறி நடந்துள்ளான். கல்லூரி மாணவியும் நடிகையாகிவிடுவோம் என்ற ஆசையில் ஏமார்ந்து இருக்கிறார். 

Cinema Producer

ஒருகட்டத்தில் மாணவிக்கு சந்தேகம் வந்து கேள்வி எழும்பும் போதெல்லாம், நான் உன்னை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி அத்துமீறி இருக்கிறான். மாணவியை தன்வசப்படுத்தி சில நேரத்தில் பார்த்தீபன் குறும்படத்தில் நடிக்க வைத்து இருக்கிறான். திடீரென பார்த்தீபன் மாயமாகவே, ஏமாற்றத்தை உணர்த்த மாணவி அவனை தேடுகையில் பார்த்தீபனுக்கு முன்பே திருமணம் ஆகியிருத்தத்தை உறுதி செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக மாணவி கடந்த செப். 13ம் தேதி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியை போல பல பெண்கள் சிக்கி பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த அதிகாரிகள் பார்த்தீபனை தேடி வலைவீசி, தலைமறைவான அவரை 50 நாட்கள் கழித்து கோவையில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தவரை தட்டி தூக்கியுள்ளனர். தற்போது பார்த்தீபன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.