சினிமா

வேற லெவல் சர்ப்ரைஸ்! சண்டை,போட்டியை மறந்து.. செம குஷியில் துள்ளிக்குதித்த போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!

Summary:

பிக்பாஸ் வீட்டில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 80 நாளை எட்டியுள்ளது. மேலும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவரும் இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை போல இந்த முறையும் சண்டை, சமாதானம், அழுகை என பிக்பாஸ் வீடு காரசாரமாக உள்ளது

 மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெறியேறினார். மேலும் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அனிதா,ஆரி, ஷிவானி, கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ் மற்றும் கிப்ட்டால் உற்சாகத்தில்  துள்ளிக்குதித்த போட்டியாளர்கள் தங்களுக்கு இடையே உள்ள போட்டியை மறந்து ஒன்றாக செம ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.                                                  


Advertisement