சேலையில் கொள்ளை அழகில் சிவகார்த்திகேயன் பட பாடலுக்கு நடனமாடிய சித்து! வைரலாகும் அசத்தல் வீடியோ!

சேலையில் கொள்ளை அழகில் சிவகார்த்திகேயன் பட பாடலுக்கு நடனமாடிய சித்து! வைரலாகும் அசத்தல் வீடியோ!


Chitra dance for sivakarthickeyan movie song

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த தொடரில் நடித்ததற்கு பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள்  பட்டாளமே உருவாகியுள்ளது. 
இந்த நிலையில் 28 வயதாகும் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை சித்ரா தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு சேலை அணிந்து நடனமாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.