சினிமா

இந்த வயசுலயும் என்னா ஆட்டம்..! சித்தி 2 கவின் அம்மாவின் மாஸ்டர் கம்மிங் டான்ஸ் வீடியோ.. செம வைரல்..

Summary:

சித்தி 2 சீரியல் நடிகை மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் வீடியோ இணைய

சித்தி 2 சீரியல் நடிகை மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் சன் டிவி சித்தி 2 தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கவின் - வெண்பாவின் கதாபாத்திரம் சித்தி 2 தொடரை மேலும் வெற்றிபெற செய்துள்ளது. இந்த தொடரில் ராதிகா, நிழல்கள் ரவி என பல்வேறு பிரபலங்கள் நடித்துவருகிறார்.

அவர்களுடன் சேர்ந்து முக்கிய காதாபாத்திரத்தில், தொடரின் வில்லியாகவும், கவினின் அம்மாவாகவும் நடித்துவருகிறார் மீரா கிருஷ்ணா. முன்னதாக சன் டிவியில் நாயகி தொடரில் நடித்துவந்த இவர், தற்போது சித்தி 2 தொடரில் எதிர்மறை காதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

மேலும் விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகிவரும் அன்புடன் குஷி தொடரிலும் இவர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படி தொடர்ந்து சீரியலில் பிசியாக இருந்தாலும், மறுபுறம் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் மீரா கிருஷ்ணா.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும், வாத்தி கம்மிங் பாடலுக்கு, விஜய் போட்ட ஸ்டெப்பை மிக அழகாக ஆடி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement