சினிமா

தலைவா.. நடிகர் வடிவேலுவை சந்தித்த பிரபல சன் டிவி சீரியல் நடிகர்! அட. யார்னு பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்.!

Summary:

தலைவா.. நடிகர் வடிவேலுவை சந்தித்த பிரபல சன் டிவி சீரியல் நடிகர்! அட. யார்னு பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவருக்கென உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் இல்லாத மீம்ஸ்கள், ட்ரோல்ஸ்களே கிடையாது எனலாம்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு பல தடைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பட வேலைக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமடைந்துள்ளார். மேலும் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் சித்தி-2 தொடரில் கவின் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் நந்தன் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் வடிவேலுவை சந்தித்துள்ளார். அப்பொழுது அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் ஒருநாள் உங்களுடன் நடிக்க வேண்டும் தலைவா என குறிப்பிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement