சினிமா

நீங்கள் விக்ரமுடன் நடிக்க வேண்டுமா? உங்களுக்காக இதோ ஓர் மாபெரும் அரிய வாய்ப்பு!!

Summary:

chance to act with vikram

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். படத்திற்காக தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் நடிகர் விக்ரம்.

இந்நிலையில் நடிகர் கமலின் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.மேலும் ஜூலை 19 வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

vikram க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து விக்ரம், இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில் சில புதுமுகங்களை அறிமுகம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இதன் முயற்சியாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வயாகாம் நிறுவனங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் விக்ரமின் 58-வது படத்தில்  நடிக்க விருப்பமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினரும் தங்களது  புகைப்படங்களையும், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் சில நிமிட வீடியோக்களையும் casting.teamajay03@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புமாறு பதிவிட்டுள்ளனர்.


 


Advertisement