எனக்கு வேறு யாருமில்லை.. உருக்கமாக நடிகர் செல்முருகன் வெளியிட்ட பதிவு! கண்ணீருடன் ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

எனக்கு வேறு யாருமில்லை.. உருக்கமாக நடிகர் செல்முருகன் வெளியிட்ட பதிவு! கண்ணீருடன் ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!


cellmurugan-tweet-about-actor-vivek-dead

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் எந்த பலனுமின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். 

அவரது மறைவு தமிழ் நடிகர் நடிகைகள், ரசிகர்கள் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் பலரும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து தற்போது வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், நடிகர் விவேக்கின் மேலாளரும் அதுமட்டுமின்றி நெருங்கிய நண்பருமான செல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்கலங்கும் வகையில் அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஓர் மரணம் என்ன செய்யும், சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள், சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள், சிலர் RIPபுடன் கடந்து போவார்கள், சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள், சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள். ஆனால் அண்ணா...  உண்மையான ஜீவன், என் உயிர் தோழன், என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண.. காற்றில் கரைந்து விட்டாயே! இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!  இனி என் முருகனுக்கு யார்? துணை
விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?இனி அவனுக்கு
யார்? துணை..
யார்? துணை....
யார்? துணை... என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.