சினிமா

"செக்கச் சிவந்த வானம்" எந்த படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? ரசிகர்கள் கூறுவது என்ன!!

Summary:

ccv is a copied movie

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் அர்விந்த்சாமி, ஜோதிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தற்சமயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். தற்சமயம் இந்த படத்தை பற்றி பல நல்ல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், சர்சைக்குரிய விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அதாவது, 2013 இல் வெளிவந்த கொரியன் திரைப்படம் 'நியூ வேர்ல்ட்'. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று பல விருதுகளையும் பெற்றுள்ளது.   பல்வேறு குற்ற பின்னணி கொண்ட 'கோல்டுமூன்' என்ற நிறுவனத்தின் தலைவர் கொல்லப்படுகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள அடுத்த நிலைத் தலைவர்கள் தலைமைப் பதவி அடைய விரும்புகிறார்கள்.

Image result for new world korean movie

இந்நிலையில் தலைமைப் பதவியை அடைய அவர்களிடையே போட்டி உருவாகிறது. இந்த நிலையில் ஒரு போலீஸ் அதிகாரி அந்த கூட்டத்தில் சேர்ந்து ஒரு முக்கிய நபருக்கு உதவியாக செயல்படுகிறார். முடிவில் அந்த  நபர் தலைமைப் பதவியை அடைந்தாரா, போலீஸ் அதிகாரி அந்த நிறுவனத்தை ஒழிதாரா என்பது தான் படத்தின் மீதி கதை.

இந்த படத்தை காப்பி அடித்து தான் தற்பொழுது செக்கச் சிவந்த வானம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வெளிவந்த போக்கிரி படத்தில் இளையதளபதி விஜய் ஏற்ற கதாபாத்திரம் போலவே விஜய் சேதுபதிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் விஜய் சேதுபதிக்கு என்று எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image result for mani ratnam

பொதுவாக மணிரத்தினம் எடுக்கும் படங்கள் இதேபோன்று வேறு ஏதாவது கதையை தழுவிய இருக்கும் என்பதும் பரவலாக பேசப்பட்டு வரும் கருத்து. இதே பாணியை தான் இந்த படத்திலும் மணிரத்தினம் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.


Advertisement