சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த பிரபல இளம்நடிகை! இறப்பதற்கு முன் வெளியிட்ட உருக்கமான கடைசிபதிவு! கண்கலங்கும் திரையுலகம்!

Summary:

Bollywood actress dead by cancer

பாலிவுட் சினிமாவில் மோன்ஜாய் முகர்ஜி இயக்கிய ஹை அப்னா தில் தோ அவாரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை திவ்யா செளக்ஸி. அதன் பிறகு அவர் பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார்.

நடிகை திவ்யா கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மேலும் அதற்காக தீவிர சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.  இந்த தகவல்  இந்தி சினிமா மற்றும்  சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திவ்யா செளக்ஸி, தான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உருக்கமானப் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சொல்ல நினைப்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. சில மாதங்களாகத் தப்பியோடி தலைமறைவாகி இருந்தேன். இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்.

வலி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள். நீங்கள் என்னை எவ்வளவு அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் பேசக் கூட முடியவில்லை. புற்றுநோய் என்னை கொன்று கொண்டிருக்கிறது. என் மரணம் எளிதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். பதில் அளிக்காமல் இருப்பதற்கு மன்னிக்கவும். சென்று வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 


Advertisement