இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக்! தீயாய் பரவும் வீடியோ! கண்கலங்கும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நகைச்சுவை நடிகர், சின்னக்கலைவாணர் விவேக். இவர் கடந்த 17ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமானார். இவரது மறைவு இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அவரை நினைவு கூறும் வகையில் அவரது ரசிகர்கள் தற்போது விவேக்கின் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேடி வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். நகைச்சுவை நடிகர் விவேக் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடத்தில் ஆனநிலையில் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.
#Vivek Birthday Celebration In The Sets Of #Indian2 pic.twitter.com/7wI1ks8OpW
— chettyrajubhai (@chettyrajubhai) April 19, 2021
இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விவேக் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.