அடப்பாவமே.. கண்ணீரில் கதறும் பிக்பாஸ் தாமரை.. நடக்கக்கூடாத சோகம்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!!
![biggboss-thamarai-father-died](https://cdn.tamilspark.com/large/large_whatsapp-image-2023-06-03-at-115257-60590.jpeg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் மேடை கலைஞர் தாமரை. இவர் பிக்பாஸில் பரீட்சயம் இல்லாத நபராக அறிமுகமானாலும், அந்த இல்லத்திற்குள் சென்ற பின்னர் மக்களிடையே பரீட்சியமானார். பிக்பாஸின் இறுதிவாரம் வரை தாக்குபிடித்தவர் பின் நாட்களில் வெளியேறினார்.
மக்களின் மனதை கவர்ந்த தாமரைசெல்வி சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சிறுவயதிலிருந்து மேடை கலைஞராக பணியாற்றி வரும் தாமரை, வறுமை காரணமாகவே சிறு வயதிலிருந்து நாடகத்தில் சேர்ந்து குடும்பத்திற்காக உழைத்தவர் ஆவார்.
தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை குடும்பத்திற்கு வீடு ஒன்று கட்டிவரப்பட்ட நிலையில், வீட்டை கட்டி முடிக்கும் தருவாயில் தாமரையின் தந்தை காலமாகி இருக்கிறார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.