சினிமா

இயக்குனர் நைனாருடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!

Summary:

biggboss-dany-next-movie

தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் கோபி நைனார். இந்த அடுத்ததாக இயக்கம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோவாக நடிகர் ஜெய் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா குத்துசண்டை வீரராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்தில் நடிக்கும் முக்கியமான நடிகர் நடிகைகள் பற்றியும், மற்ற கலைஞர்கள் பற்றியும் விரைவில் வெளியாகலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான டேனி இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement