ஆரம்பித்துவைத்த ரம்யா பாண்டியன்! கீழே விழுந்து மண்ணை கவ்விய அறந்தாங்கி நிஷா! 3 வது ப்ரோமோ வீடியோ.

ஆரம்பித்துவைத்த ரம்யா பாண்டியன்! கீழே விழுந்து மண்ணை கவ்விய அறந்தாங்கி நிஷா! 3 வது ப்ரோமோ வீடியோ.


Bigg boss tamil season 4 day 1 promo 3

பிக்பாஸ் சீசன் நான்கு முதல் நாள் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்றுள்ளது பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் நான்கு நேற்று முதல் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ரியோ, ரம்யா பாண்டியன், ஷிவானி, அறந்தாங்கி நிஷா போன்ற பிரபலங்கள் இந்தமுறை பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிவருகின்றார்.

Bigg boss

இந்நிலையில் வாத்தி கம்மிங்க பாடலுடன் தொடங்கி, நடிகை ஷிவானியை சக போட்டியாளர்கள் ஓரம் கட்டுவது வரையிலான முதல் இரண்டு ப்ரோமோ காட்சிகளை விஜய் டிவி இன்று ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ காட்சியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதில், போட்டியாளர்களால் அனைவரும் டிக் டிக் யாரது? திருடன். என்ன வேண்டும்? நகை வேண்டும். என்ன நகை? கலர் நகை. என்ன கலர்? என்ற விளையாட்டை விளையாடுகின்றனர். அதில் நடிகை ரம்யா பாண்டியன் ஆரஞ்சு கலர் என கூறிவிட்டு போட்டியாளர்களை துரத்தவும், ஆரஞ்சு கலருக்கு பதிலாக அறந்தாங்கி நிஷா மஞ்சள் கலரை தொட்டுக்கொண்டு இருக்க, பின்னர் அவர் போட்டியாளர்களை துரத்தும்போது தவறி கீழே விழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.