சினிமா Bigg Boss

அடேங்கப்பா! பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.

Summary:

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் அல்லது ஒருவார சம்பளம் எவ்வளவு என்பது குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் அல்லது ஒருவார சம்பளம் எவ்வளவு என்பது குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 தற்போது 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம் போல் இந்த சீசனிலும் சண்டை, அழுகை, சோகம், சமாதானம் என பிக்பாஸ் வீடு காரசாரமாக உள்ளது. இந்நிலையில் போட்டியின் முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் யாரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

ஆனால் இந்த வாரம் நிச்சயம் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த வாரம் யார் வெளியேறுவார்? அடுத்த வாரம் யார் வெளியேறுவார்? யாரெல்லாம் போட்டியின் இறுதிவரை செல்வார்கள்? யார் இந்தமுறை பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றப்போகிறார் என்பது முதல் அனைத்து விவரங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கிவிட்டது.

அதேபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒருநாள் அல்லது ஒருவாரத்திற்கான சம்பளம் எவ்வளவு என்பது குறித்தும் தற்போது ஒரு தகவல் வைரலாகிவருகிறது. இந்த தகவல் அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், பல இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்கள் ஆகும்.

அதன்படி,
ரியோ - 2 லட்சம்
ஆரி - 2 லட்சம்
ரேகா - 2 லட்சம்
ஜித்தன் ரமேஷ் - 2 லட்சம்
ரம்யா பாண்டியன் - 2 லட்சம்
அறந்தாங்கி நிஷா - 2 லட்சம்

ஷிவானி நாராயணன் - 1.5 லட்சம்
சனம் ஷெட்டி - 1.5 லட்சம்
சம்யுக்தா - 1.5 லட்சம்
சுரேஷ் சக்கரவர்த்தி - 1.5 லட்சம்
பாலாஜி - 1.5 லட்சம்
வேல்முருகன் - 1.5 லட்சம்
அனிதா - 1.5 லட்சம்

கேப்ரில்லா  - 1 லட்சம்
சோம் சேகர்  - 1 லட்சம்
ஆஜீத்  - 1 லட்சம்


Advertisement