பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சுருட்டிய பாய்.. திறந்துபார்த்த போட்டியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சுருட்டிய பாய்.. திறந்துபார்த்த போட்டியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..


Bigg boss shivani surprise entry

பிக்பாஸ் வீட்டிற்குள் சுருட்டிய பாய்க்குள் சர்ப்ரைஸாக வந்த ஷிவானியை பார்த்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

18 பிரபலங்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் சீசன் நான்கு வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. 18 பேரில் ஏற்கனவே 12 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டநிலையில் 6 பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வானார்கள். இந்நிலையில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கேப்ரிளா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் தற்போது இறுதி வார பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இந்த சீஸனின் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இவர்களில் கடந்த வாரம் வெளியேறிய ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் வராமல் இருந்தநிலையில் தற்போது அவரும் சர்ப்ரைஸாக வீட்டிற்குள் வந்துள்ளார்.

இதுகுறித்து வெளியான ப்ரோமோ விடியோவில் பிக்பாஸ் ஹவுஸில் இருப்பவர்களுக்கு மதிய உணவு வந்திருந்தது. அதனுடன் சேர்த்து சுருட்டிய பாய் ஒன்றும் வந்திருந்தது. அதனை பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரித்து பார்க்க முற்பட்டபோது அதற்குள் இருந்து ஷிவானி வெளிவரவே அனைவரும், அதிர்ச்சி கலந்த சந்தோசத்துடன் ஷிவானியை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேற்றனர்.