சினிமா Bigg Boss

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம்! யார் தெரியுதா? அட! அவரா இது?

Summary:

பிக்பாஸ் போட்டியில் தற்போது விளையாடிவரும் பிரபல போட்டியாளர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் போட்டியில் தற்போது விளையாடிவரும் பிரபல போட்டியாளர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் வீடு பலரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. உதாரணத்திற்கு ஆரவ், ஓவியா, ஹரிஷ் கல்யாண், ரைசா போன்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார்கள். அதேநேரம் அவர்களுக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டி போடுகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவராக விளையாடிவருகிறார் இந்த புகைப்படத்தில் குட்டி குழந்தையாக இருக்கும் நடிகை ஷிவானி.

தற்போது 19 வயதாகவும் நடிகை ஷிவானி ஏற்கனவே சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இவர் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Advertisement