சினிமா பிக்பாஸ்

3ஆம் திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா பிக்பாஸ் ரேஷ்மா? இவர் தான் மாப்பிள்ளையா?

Summary:

Bigg boss second marriage rumor news

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அந்த படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார் ரேஷ்மா. போட்டியின் நடுவே இவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டமான அனுபவங்கள் குறித்து அவர் பேசியது அனைவரையும் கண்கலக்கங்க வைத்தது.

இந்நிலையில் ரேஷ்மா வேறொருவரை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.

அதற்கு காரணம், இவர் ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டு உள்ளார். வாழ்க்கை மிகவும் குறுகலானது. அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பும் காட்டும் நபருடன் செலவழியுங்க என்று பதிவிட்டுள்ளார்.

அதனால், ரேஷ்மா இவரைத்தான் காதலிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement