தர்சன் கொடுத்த மோசமான பட்டம்! சோகத்தில் முகம் மாறிய கவின்! இன்றைய ப்ரோமோ வீடியோ.

தர்சன் கொடுத்த மோசமான பட்டம்! சோகத்தில் முகம் மாறிய கவின்! இன்றைய ப்ரோமோ வீடியோ.


Bigg boss season 3 day 86 promo video 2

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 85 நாட்களை கடந்து இன்னும் சில வாரங்களில் சீசன் மூன்று முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த சீசனில் தற்போது 7 மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் தனக்குத்தான் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சேரன் கூறுகிறார். இதனை அடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான இராதாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் கொடுத்துள்ள சில வார்த்தைகளுக்கு யார் தகுதியானவர் என தர்சன் பட்டம் கொடுக்கிறார்.

bigg boss tamil

அதில், சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என கவினையும், லாஷ்லியாவையும் தர்சன் குறிப்பிடுகிறார். அடுத்ததாக மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் மீண்டும் கவினையும் குறிப்பிடுகிறார் தர்சன்.

ஏன் எங்களை இப்படி குறிப்பிடுகிறாய் என சிரித்துக்கொண்ட சேரன் விளக்கம் கேட்கிறார் ஆனால் தர்சன் விளக்கம் தர மறுக்கிறார். கூட்டத்தில் ஒளிந்து வாள்பவர், மக்களின் அனுதாபத்தை தேடுபவர் என தர்சன் கவினை குறிப்பிடும் போது கவினின் முகமே சற்று மாறுகிறது. இதோ அந்த வீடியோ.