பிக்பாஸ் வனிதாவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்! சரியான ரிவீட்டு - கைதட்டிய ரசிகர்கள்!



Bigg boss season 3 day 55 promo 3

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 54 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் சண்டைக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் பிக்பாஸ் வீடு விறுவிறுப்பாக செல்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

அவர் வீட்டுக்கு வருவதற்கு முன் காதல் வயப்பட்டிருந்த பிக்பாஸ் இல்லம் தற்போது சண்டை காட்சிகளால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது டிவிஸ்ட் நடந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதத்தில் மதுமிதா தனது விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

bigg boss tamil

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களை பார்க்க கமல் வந்துள்ளார். இதுவரை நடந்த சண்டைகளுக்கு கமல் என்ன கேள்வி கேட்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் வனிதாவை கமல்ஹாசன் வெளுத்து வாங்க ரசிகர்கள் கைத்தட்டல் பறக்கிறது. இதோ அந்த வீடியோ.