சினிமா பிக்பாஸ்

பிக்பாஸின் செயலால் கண்ணீர் விட்டு அழும் முகேன் மற்றும் சேரன்! என்ன நடந்தது தெரியுமா?

Summary:

Bigg boss promo day 79

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை நெருங்கியுள்ள சீசன் 3 இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. மொத்தம் 16 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர். இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

79 வது நாளான இன்று மற்ற சீசன்களை போல இந்த முறையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களை வீட்டிற்குள் வரவைத்துள்ளார் பிக்பாஸ். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் முகெனின் தாய் மற்றும் தங்கை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்களை பார்த்த முகேன் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தி அவர்களை கட்டி அணைத்து தூக்குகிறார். இதனை சீக்ரெட் அறையில் இருந்து பார்த்துக்கொண்ட சேரனும் அழுகிறார். மிகவும் சென்டிமெண்டாக உள்ள அந்த ப்ரோமோ இதோ. 


Advertisement